கடந்த 2 மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்த MS DHONI தலைமையிலான சென்னை அணி IPL 2023 டி20 தொடர் சாம்பியன்ஷிப்பை 5வது முறையாக வென்றது. குஜராத் அணிக்கு எதிராக அதன் சொந்த ஊரான அகமதாபாத் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. ரவீந்திர ஜடேஜா முதல் பதிரனா வரை அனைத்து வீரர்களும் தேவையான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
நம்பிக்கை நட்சத்திரம் ருத்ராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் 590 ரன்கள் எடுத்து சென்னை அணிக்காக அதிக ரன் குவித்தவர் என்ற பட்டியலில் 2 ஆவது இடம் பிடித்தார். CSK ன் 5வது கோப்பையை வென்று தனது ஜெர்சியில் 5வது நட்சத்திரத்தை வரைந்து வெற்றியை அனைவரிடத்திலும் வெளிப்படுத்தினர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவர், கடந்த 2020 சீசனில் முதல் முறையாக 20 லட்சத்துக்கு சென்னைக்கு வாங்கப்பட்டார். அந்த ஆண்டு, சென்னை அணி வரலாற்றில் முதல்முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து லீக் சுற்றில் வெளியேறியது.
எதிர்கால நட்சத்திரம்:
அதற்கும் மேலாக, அவர் 2021 சீசனில் ஆரஞ்சு கேப் வெற்றியாளராக 635 ரன்கள் எடுத்தார் மற்றும் சென்னையின் 4 வது கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அதன் காரணமாக, அவருக்கு இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது, தொடக்கத்தில் தடுமாறிய பெரும்பாலான வீரர்களைப் போலவே, அவர் சுமாராக செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டார். பிறகு 2022 சீசனில் 368 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் இந்த சீசனில் பார்முக்கு திரும்பிய அவர் சென்னையின் 5வது கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார்.
மேலும், கடந்த விஜய் ஹசாரே டிராபியில் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்தது மட்டுமின்றி 3 சதங்கள், ஒரு இரட்டை சதம் அடித்து உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், இந்த சீசனில் 890 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று ஏற்கனவே நிலையான இடத்தைப் பெற்றுள்ள சுப்மான் கில், இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.
அதேபோல், கடந்த 4 ஐபிஎல் தொடரில் 3 சீசன்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக உள்ள ருதுராஜை பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டினார். குறிப்பாக, குவாலிபையர் 1ல் 60 (44) ரன்கள், இறுதிப் போட்டியில் 26 (16) ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். எதிர்காலத்திலும் அழுத்தமான சூழ்நிலையில் அசாத்தியமாக விளையாடி அசத்துவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது, “அழுத்தமான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உடலளவில் பிட்டாக உள்ள அவர் இளமையாகவும், துடிப்பாகவும் இருக்கிறார், நன்றாக பீல்டிங் செய்கிறார். எனவே சென்னை மற்றும் இந்திய அணியைப் பொருத்தவரை ருதுராஜுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது” என்று கூறினார்.
அதே நிகழ்ச்சியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப், சுப்மன் கில் குறித்து பின்வருமாறு கூறினார். “கில் மனதளவில் மிகவும் வலிமையான வீரர். சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படி ரன் அடிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். பொதுவாக சிறந்த வீரர்கள் உச்சகட்ட பார்முக்கு வந்த பிறகு ஓயமாட்டார்கள். அவர்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பதோடு, அந்தப் ஃபார்மை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். மும்பைக்கு எதிராக கில் ஒற்றையாழாக வெற்றி பெற வைத்தது அதற்குச் சான்றாகும்” என்று கூறினார்.
ICC 2023 உலகக் கோப்பை அட்டவணை எப்போது வெளியிடப்படும்? ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பு…..