Tuesday, April 16, 2024
HomeDaily Updateஇன்று நடக்கப்போவது இதுதான்.. வானிலையில் மெகா மாற்றம்.. நிபுணர் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

இன்று நடக்கப்போவது இதுதான்.. வானிலையில் மெகா மாற்றம்.. நிபுணர் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் முடிந்து மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இன்னும் வெப்பம் தணியவில்லை. முக்கியமாக வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என எதிர்பார்க்கும் போது அதன் உச்சத்தை எட்டியுள்ளது.

நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களாக இந்தியாவிலும், தமிழகத்திலும் கோடை வெயில் உச்சத்தை எட்டியது. தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பம் உச்சத்தில் உள்ளது.

சென்னையில் மக்கள் பகலில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் அதிகமாக உள்ளது. மாலை 6 மணி வரையிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இந்த மாதம் சென்னையின் மிக மோசமான கோடைகாலமாக பார்க்கப்படுகிறது. இம்மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் உண்மையான கோடை காலம் நிலவி வருகிறது.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியுள்ளது. சென்னையிலும் மட்டும் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

இந்த வெயிலின் தாக்கம் இந்தியாவின் பல பகுதிகளை தாக்கி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளது. இதனால் 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து மக்கள் அவதிக்குள்ளாகினர். சில இடங்களில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை கூட உயர்ந்துள்ளது.

வெயிலின் தாக்கம் : நேற்றும் தமிழகத்தில் மிக மோசமான வானிலை நிலவியது. சென்னை, வேலூர், சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை, நாமக்கல், திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவியது. நேற்று வெயில் 40 டிகிரி செல்சியஸை தாண்டியது

கடந்த வாரத்துடன் வெப்ப அலை முடிவுக்கு வந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இனிமேல் படிப்படியாக வெப்பநிலை குறையும் எனவும் தெரிவித்துள்ளது. வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். மலைப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என கணிக்கப்படுகிறது. கிழக்கு இந்தியாவையும் புயல் தாக்க வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது . எப்போதும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் இந்த மழை, இம்முறை மே மாத இறுதியில் தொடங்கும். தென்மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் இன்னும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. குறிப்பாக சென்னையில் மழை பெய்யவில்லை. தமிழகத்தில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று கடுமையான வெப்பம் நிலவும். தமிழகத்திலும் வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு கடுமையாக இருக்கும். சென்னையின் மேற்குப் பகுதியில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸைத் தொடும். இங்கு கடல் காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் வெப்பம் அதிகமாக இருக்கும்.

இன்னும் பருவமழை தொடங்காததால் வடமேற்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் உள்மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read also…

1901க்குப் பிறகு அதிக வெப்பம் பதிவு ! உடலில் நீரின் அளவு குறையும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments