Tuesday, April 16, 2024
HomeDaily Updateஇராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள்-ஜூன் 27: முற்போக்கு பெண் அரசியல் முன்னோடி

இராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள்-ஜூன் 27: முற்போக்கு பெண் அரசியல் முன்னோடி

தற்சமயம் மயிலாடுதுறை என அழைக்கப்படும் அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாயவரத்தில் 1925-ம் ஆண்டு ஒரு மாநாடு நடைபெற்றது. தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற அந்த மாநாட்டை காங்கிரஸ் இயக்கத்தின் தொண்டராக இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நடத்தி வைத்தார்.

மாயவரத்தில் நடைபெற்ற தேவதாசி ஒழிப்பு மாநாடு வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு. அப்போது காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்ட தந்தை பெரியாரும், திரு.வி.கல்யாணசுந்தரனாரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தேவதாசி முறை ஒழிப்புக்காக ஆதரவு தெரிவித்தனர். பெரியார் அவரின் ‘குடியரசு’ இதழிலும், திரு.வி.க.வின் ‘நவசக்தி’ இதழிலும் தொடர்ந்து தேவதாசி முறை ஒழிப்புக்கு பிரச்சாரம் செய்தார். பின்பு வகுப்புவாத பிரதிநிதித்துவம் கோரி பெரியாருடன் காங்கிரஸிலிருந்து இராமாமிர்தம் வெளியேறினார். சுயமரியாதை இயக்கத்தில் 1925லிருந்து பெரியாருடன் இணைந்து பணியாற்றினார்.

தொடர்ந்து தேவதாசி முறை ஒழிப்பு போராட்டத்திற்காக கடும் இன்னல்களை சந்தித்தவர் இராமாமிர்தம். ஒருமுறை, மேடையில் பேசும் போது, அவரின் முடி வெட்டப்பட்டது. மற்றுமொரு முறை உணவில் எருவை கலந்து கொல்ல முயற்சி நடந்தது. இதற்கெல்லாம் அஞ்சாதவர் என்பதனை அவருடைய வார்த்தைகளிலேயே தெரிந்து கொள்ளலாம். அவர்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து உங்கள் மகள்களை பொதுமகள் வாழ்வில் விட்டுவிடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது “தேவதாசிகளுக்கு ஒரு எச்சரிக்கை” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

1930 அன்று ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டை பெரியார் நடத்தினார். அந்த மாநாட்டில் இராமாமிர்தமும் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் தான் கடவுளின் பெயரால் பெண்களை தேவதாசிகளாக ஈடுபடுத்தும் முறையை ஒழிக்க வேண்டும், இதிலிருந்து தப்பிய பெண்களை திருமணம் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும், டாக்டர் முத்துலட்சுமியின் தேவதாசி ஒழிப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்து வந்த இரவ்சாகிப் ஐ.குமாரசாமி தமிழர் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்று பட்டுக்கோட்டை அழகிரிசாமி தளபதியாக இருந்து இராணுவத்தை வழிநடத்தினார். 300 மைல் தூரம் நடந்த இந்த தமிழ் இராணுவத்தின் தொண்டர்களில் 60 வயதான இராமாமிர்தமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு 14.11.1938 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் கைது செய்யப்பட்டவர்களில் டாக்டர் தருமாம்பாள் மற்றும் தருமாம்பாளின் மருமகள் சீதம்மாள், மலர்முகத்தம்மையார் மற்றும் பட்டம்மாள். கைது செய்யப்பட்ட 5 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தமிழ் மொழிப் பாதுகாப்புத் துறையில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

தேவதாசி ஒழிப்புக் களத்தில் மேடையில் பேசுவதோடு, தொடர்ந்து எழுத்தின் வாயிலாகவும் பரப்புரையில் ஈடுபட்டார். ‘தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்ற நாவல் இவரின் எழுத்துப் பணிக்கு அடையாளம். ‘தமயந்தி’ என்ற தொடர்கதையை அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் எழுதிவந்தார். காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் என தொடர்ந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்ட இராமாமிர்தம், முற்போக்கு அரசியல் முன்னோடிகளுள் ஒருவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments