Tuesday, April 16, 2024
HomeDaily Updateஇளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முதல் வாய்ப்பு: மே.இ.தீவுகள் தொடருக்கான இந்திய அணியில் இடம் !

இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முதல் வாய்ப்பு: மே.இ.தீவுகள் தொடருக்கான இந்திய அணியில் இடம் !

 

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13 வரையில் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து, கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள், 2 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதற்கான வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு டெஸ்ட் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதன்முறையாக இந்திய சீனியர் அணிக்காக விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். அண்மையில் முடிந்த ஐபிஎல் போட்டி மற்றும் உள்நாட்டில் நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் சீசனில் தனது சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி அவர் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். அதே போல் ருதுராஜ் கெய்க்வாட் டெஸ்ட் அணியில் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். அனுபவ வீரர் புஜாராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், நவ்தீப் சைனி, ஜெய்தேவ் உனத்கட்.

ஒருநாள் தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். ருதுராஜ் மற்றும் முகேஷ் குமார் என இருவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒருநாள் அணியை பார்க்கும் போது இதுதான் இந்த ஆண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியா என்பது சந்தேகமாக உள்ளது. T20 தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், அக்சர் படேல், சஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments