Tuesday, April 16, 2024
HomeDaily Updateசனிக்கோளில் நீர்: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய படங்கள் உறுதிப்படுத்தின..

சனிக்கோளில் நீர்: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய படங்கள் உறுதிப்படுத்தின..

 

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரிய குடும்பத்திற்குள் பூமியைத் தவிர வேறு ஒரு கிரகத்தின் நிலவு ஒன்றில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

விண்வெளி ஆய்வு வளர்ச்சியடைந்த காலத்திலிருந்தே, பூமியைத் தவிர மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சனியின் துணைக்கொள் ஒன்றில் நீர் இருப்பதை படம்பிடித்துள்ளது.

இதன் அடிப்படையில், நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜேம்ஸ் வெப், நமது சூரிய குடும்பத்தில் உள்ள சனிக்கோளின் நிலவுகளில் ஒன்றான என்செலடஸில் (பனிக்கட்டி நிலா) 9,600 கிலோமீட்டர் நீள நீரூற்றை கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் 2005 ஆம் ஆண்டிலேயே, சனிக்கோளின் நிலவுகளில் நீர் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறிவந்துள்ளனர்.

இந்த நீரூற்றின் அளவை வைத்து பார்த்தால், இந்த நீரூற்று என்பது ஜப்பானில் இருந்து இங்கிலாந்துக்கு உள்ள தூரம். மேலும், அதில் காணப்படும் கடல் பகுதிகளில் உள்ள நீர் உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால், உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளும் உருவாகலாம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் என்செலடஸ் பற்றி விஞ்ஞானிகள் கூறும்போது, “என்செலடஸின் மேற்பரப்பு வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸ். “அதே நேரத்தில், இந்த நீரை சூடாக்குவதற்கு நிலவின் மையப்பகுதியில் போதுமான வெப்பம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.” சனிக்கோளுக்கு 124 நிலவுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி:

நாசாவின் சாதனையாக பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஏவப்பட்டது. நாசாவின் கூற்றுப்படி, இந்த தொலைநோக்கி பால்வீதியில் பூமியைப் போன்ற உயிர்களைக் கொண்டிருக்கக்கூடிய வெளிப்புறக் கோள்கள் உள்ளதா?, பிக் பேங்கிற்குப் பிறகு முதல் விண்மீன் திரள்கள் எவ்வாறு உருவானது? போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கும்.

பூமியின் வெப்ப எதிரொளிப்பின் காரணமாக வரும் அகச்சிவப்பு கதிர்கள் தொலைநோக்கிக்கு இடையூறு இல்லாமல் இருக்க ஜேம்ஸ் வெப் பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் விண்வெளியில் பதிவான முதல் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார்.

1960 களில் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப கடினமாக உழைத்த நாசாவின் நிர்வாகி ஜேம்ஸ் வெப்பின் நினைவாக இந்த தொலைநோக்கி பெயரிடப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.75,000 கோடி செலவில் இந்த தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

Read also…

உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்து பாரிஸில் ஐ.நாவால் விவாதிக்கப் பட்டது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments