இந்தியாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திரு.திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.
அறம் என்பது கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வது, கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் தடைநீக்கப்பட வேண்டும் மற்றும் சமூக வலைத்தளத்தை அதன் தரத்தில் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.…
— M.K.Stalin (@mkstalin) June 1, 2023
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் முதல் கீழ் மட்ட தொண்டர் வரை அனைவரும் twitter, facebook, youtube, whatsapp-ல் ஆக்டிவாக உள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை வெளியிடுகின்றனர்.
இதேபோல் நாம் தமிழர் கட்சியினர் மத்திய, மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். சீமானும் அவரது கட்சியினரும் தங்களின் தமிழ் தேசிய கொள்கை, ஈழப்போர் குறித்து நிறைய எழுதி வருவதுடன், அதுகுறித்து வீடியோ, தடை செய்யப்பட்ட அமைப்பின் கொடி, தலைவரின் படங்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இடும்பவனம் கார்த்தி, பாக்யராஜன், விக்கி பார்கவ் மற்றும் பலர் ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். இதேபோல், மற்றொரு தமிழ் தேசிய இயக்கமான மே 17 அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயர், தமிழ் தேசியம், ஈழ விடுதலை ஆகிய படங்கள் மற்றும் பெயர்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்களான இடும்பவனம் கார்த்தி, பாக்யராஜன், விக்கி பார்கவ், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் நேற்று முடக்கப்பட்டுள்ளன.
சட்டப்பூர்வ கோரிக்கைகள் காரணமாக இந்தியாவில் உள்ள அவர்களது கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ட்விட்டர் விளக்கமளித்துள்ளது. தடை செய்யப்பட்ட தலைவரின் படங்கள், இயக்கத்தின் பெயர்களை பயன்படுத்தியதற்காக இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
அதே சமயம் சீமான் மற்றும் நாம் தமிழர் நிர்வாகிகள் தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவையும் கடுமையாக விமர்சித்து வருவதால், தமிழக காவல்துறையின் பரிந்துரையின் பேரில் அவர்களின் கணக்கு முடக்கப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினே இந்த முடக்கத்துக்கு கண்டனம் தெரிவித்திருப்பதன் மூலம், தமிழக காவல்துறை எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது.