Friday, September 22, 2023
HomeDaily Updateடென்னிஸ் வரலாற்றின் தன்னிகரில்லா வீரர் ; ஜோக்கோவிச் 23 வது கிராண்ட்ஸ்லாமை வென்றார்.

டென்னிஸ் வரலாற்றின் தன்னிகரில்லா வீரர் ; ஜோக்கோவிச் 23 வது கிராண்ட்ஸ்லாமை வென்றார்.

அல்காரஸ் உடன் அரையிறுதி வெற்றிக்குப்பின் ரசிகர்கள் கிண்டல் செய்வதைப் பற்றி கேட்டபோது, “அது பற்றி எனக்கு துளியும் கவலையில்லை, இது முதலுமில்லை கடைசியுமில்லை. நான் தொடர்ந்து வென்று கொண்டே இருப்பேன்.” என்று பதிலளித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஏதாவது ஒரு வீரர் 20 கிரர்ண்ட் ஸ்லாம்கள் வென்றிருப்பபார் எனச் சொல்லியிருந்தால் அவரைப் பார்த்து எல்லாரும் எள்ளி நகையாடியிருப்பர். ஆனால் இப்பொழுது பெடரர், நடால் மற்றும் ஜோக்கோவிச் என 3 பேர் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளனர். அதிலும் உச்சபட்சமாக நோவாக் ஜோக்கோவிச் தன் 23வது கிராண்ட் ஸ்லாம்யை வென்று நேற்று பிரஞ்ச் ஓபன் மூலம் சாதித்துள்ளார்.

36 வயது செர்பிய டென்னிஸ் வீரரான ஜோக்கோவிச் ஓபன் எராவில் பெடரர் மற்றும் நடால் ஆதிக்கம் செலுத்தியிருந்த காலத்தில் தானும் சளைத்தவன் இல்லை என தொடர்ந்து அவர்களிடம் வெற்றிகளைக் குவித்தார். ஆனால் மற்ற இருவருக்கும் இல்லாத சிறப்பு ஜோக்கோவிச்சிற்கு உண்டு. அந்த சிறப்புதான் டிபன்ஸிவ் (defensive) கேம் பிளே . இதுபோன்ற டிபன்ஸிவ் வீரர்கள் தொடற்சியாக வெற்றிகரமாக நீடிப்பது குறைவு. அப்படிப்பட்ட டிபன்ஸிவ் வீரர்தான் மெத்வதேவ், எப்படியிருந்தழும் அமெரிக்க ஓபன் தொடரில் ஜோகோவிச்சை வென்று சாதிருத்திருந்தாலும், ஆஸ்திரேலியா ஓபன் இறுதிப் போட்டியில் நடாலிடம் எதிர்பாராத தோல்விக்கு பிறகு அவர் இன்னும் மீண்டெழவில்லை. ஆனால் எவ்வளவோ தோல்விக்குப் பிறகும் தொடர்ந்து தன்னெழுச்சியாக இப்படி வெற்றிபெற்றுள்ளார் ஜோக்கோவிவ்ச்.

இவருக்கு நடால் மற்றும் பெடரருக்கு இருந்ததைப் போல ஆதரவு இருந்ததில்லை. என்றாலும் அதனைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்தார். அல்காரஸ் உடனான அரையிறுதி போட்டியின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் கிண்டல் செய்வதைப் பற்றிக் கேட்டபோது, “அது பற்றி எனக்குக் கவலையில்லை. இது முதலும் இல்லை கடைசியுமில்லை. நான் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பேன்.” என பதிலளித்தார்.

24 வயதேயான இளம் வீரர் கேஸ்பர் ரூட்டிற்கு இது 3வது கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டி. கடைசியாக 2022ஆம் ஆண்டு பிரஞ்ச் ஓபனில் தன் ஆதர்சமான நடாலிடமும், 2022ல் அமெரிக்க ஓபனில் ஸ்பானிஷ் வீரர் அல்காரஸிடமும் தோற்றிருந்தார். கேஸ்பர் ரூட், நடால் நடத்தும் டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர் என்பது கவனிக்கத்தக்கது. இவர் முதல் முதலில் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போது, அது எதிர்பாராததாக பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக தன் ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளார். 2013ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியை நடால் ஆடுவதை ரசிகராக பார்த்த ரூட் இப்போது தன் உழைப்பால் 2 பிரெஞ்ச் ஓபன் இறுதி போட்டிகளில் விளையாடி அசத்தியுள்ளார்.

நேற்றைய போட்டியில் துவக்கத்தில் ரூட் ஆதிக்கம் செலுத்தியிருந்தார். தொடர்ச்சியாக மூன்று கேம்களை கைப்பற்றினார். அதிலும் 2வது கேம் அதிக நேரம் நீடித்தது. அதன்பின் அப்படியே ஜோக்கோவிச் கைக்கு ஆட்டம் சென்றது. 7வது கேமில் ஜோக்கோவிச் கேம் பாய்ண்டில் சென்ற நீண்ட ரேலியில்(rally) தமக்கு கிடைத்த எளிதான வாய்ப்பை தவறவிட்டு விட்டார். அதுவரை பொறுமையாக ஆடிய ரூட் அதன் பிறகு தொடர்ந்து சொதப்பினார். டை-பிரேக்கில் பெரிதாக ஆட்டத்தை தன்வசப்படுத்த முயலவில்லை. ஜோக்கோவிச் முதல் செட்டை சற்று சிரமப்பட்டு வென்றார். அடுத்த செட்டை ஜோக்கோவிச் மிக எளிமையாக கைப்பற்றினார். 3வது செட்டில் 10வது கேம்வரையிலும் ஜோக்கோவிச்சுக்குப் பெரிதாக வாய்ப்பு கொடுக்காமல் விளையாடியிருந்தார் ரூட் . அதன்பின் ரூட்டின் சர்வீஸ் கேமை ( 11) எளிமையாக கைப்பற்றினார் ஜோக்கோவிச். என்னதான் ரூட் போர்ஹேண்டில் மிகச்சிறந்த வீரராக இருந்தாலும் இந்த ஆட்டத்தில் தொடர்ச்சியாக போர்ஹேண்டில் நிறைய பிழைகள் செய்தார். ஜோக்கோவிச் நிறைய அன்போர்சுடு எரர் (unforced error) செய்திருந்தாலும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தத் தவறி விட்டார். ஜோக்கோவிச்சின் சர்வுகளை சரிவர விளையாடவில்லை. இது எல்லாம் ஜோக்கோவிச் நேர் செட்களில் வெற்றி பெற வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

மெத்வதேவ் போன்று தோல்வியால் துவண்டுவிடாமால் தொடர்ந்து தன் ஆட்டத்தை மெருகேற்றினால் எதிர்காலத்தில் நிறைய ஸ்லாம்கலை ரூட் வெல்லலாம், நல்ல வீரருக்கும் மிகச்சிறந்த வீரருக்கும் வேறுபாடு அதுவே. நடால் மற்றும் பெடரருடனான போட்டியால் ஜோக்கோவிச் இவ்வளவு தூரம் வளர்ந்தாரா? அவர்கள் இல்லையென்றால் இன்னும் கூட அதிக ஸ்லாம்கள் வென்றிருப்பாரா என்று தெரியாது. ஆனால் ஜோக்கோவிச் இப்படி கூறியிருக்கிறார்.

“நடால், பெடரரை எவ்வாறு வெல்வது என்று மணிக்கணக்கில் சிந்தித்து இருக்கிறேன். கடைசி 20 ஆண்டுகளாகப் பெரும்பாலும் இவர்களே என்னுடைய சிந்தனையை ஆக்ரமித்து இருந்தனர். அவர்களை வென்றது மகழ்சியளிக்கிறது.” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments