Tuesday, April 16, 2024
HomeDaily Updateதிடீர் கனமழை சென்னையில் ... மதியம் 1 மணி முதல் 2 மணி வரை நடந்தது...

திடீர் கனமழை சென்னையில் … மதியம் 1 மணி முதல் 2 மணி வரை நடந்தது என்ன? Weather Man ட்வீட்…

சென்னையில் வெப்பம் கொளுத்திக் கொண்டிருந்த நிலையில் திடீரென மழை ஏன் பெய்தது என்பதற்கான காரணத்தை தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை காலம் துவங்கி நாள்தோறும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், மக்கள் ஓய்வெடுக்க மலைப் பகுதிகளுக்குச் செல்கின்றனர். இந்நிலையில், அவ்வப்போது பெய்து வரும் கோடை மழை மக்களை குளிர்ச்சியாக வைத்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 7ம் தேதியில் திறக்க இருக்கிறது.

இருப்பினும் வெப்பம் தணியாததால் பள்ளிகள் திறப்பது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு  ஜூன் 14ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் மேற்கு காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும், இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.

இந்நிலையில் சென்னையில் காலை முதலே வெயில் சுட்டெரித்தது. மதியவேளையில் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. சைதப்பேட்டை, வடபழனி, அசோக் நகர், முகப்பேர், கோடம்பாக்கம்,, நிடகரை, அண்ணாசாலை அரும்பாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது.

இதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளான , சிங்கப்பெருமாள்கோயில், பூந்தமல்லி, வண்டலூர் உட்பட்ட பகுதிகளிலும் கனமழை பெய்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து இன்று சென்னை திரும்பியவர்களுக்கு இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்:சென்னை மட்டுமின்றி
அதன் புறநகர் பகுதிகளில் இன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும். மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை கடல் காற்று வீசும். சென்னையின் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்” என்று குறிப்பிட்டார்.

Read also…

1901க்குப் பிறகு அதிக வெப்பம் பதிவு ! உடலில் நீரின் அளவு குறையும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments