Friday, September 22, 2023
HomeDaily Updateலியோ எவ்ளோ பெரிய ப்ளாக் பஸ்டர் ஆகும்னு தெரியாது-பிரமித்த அனிருத்

லியோ எவ்ளோ பெரிய ப்ளாக் பஸ்டர் ஆகும்னு தெரியாது-பிரமித்த அனிருத்

வாரிசு படத்துக்குப்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோஎன்ற படத்தில் நடித்துவருகிறார் விஜய். வாரிசு கொடுத்த சூட்டை இதில் தணித்துக்கொள்ள அவர் முனைந்திருப்பதாலும், மாஸ்டர், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்குவதாலும் லியோ நிச்சயம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும் படத்தின் ஒவ்வொரு சீனையும் லோகேஷ் கனகராஜ் பார்த்து பார்த்து செதுக்கி எடுத்திருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆல்டர் ஈகோ: லியோ படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து அப்படத்தின் கதை என்ன, அது LCU எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருமா போன்ற ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். ஆனால் அது பற்றி எந்தவிதமான தகவலையும் கசியவிடாமல் படக்குழு பாதுகாத்துவருகிறது. இந்தச் சூழலில் முதல் பாடலுக்கான அறிவிப்பு போஸ்டரில் ஆல்டர் ஈகோ என்ற வார்த்தையுடன் கவனம் ஈர்த்துள்ளது.

கதை என்ன: ஏற்கெனவே லியோ படத்தின் கதை பற்றி ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதில் ஒரு சம்பவத்தை செய்துவிட்டு வேறு ஒரு நபராக காஷ்மீரில் விஜய் வாழ்வார். அவரின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டு எதிரிகள் அங்கு வருவார்கள் என கூறப்பட்டது. தற்போது ஆல்டர் ஈகோ என்ற வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறதென கூறுகிறார்கள் ரசிகர்கள். ஏனெனில் ஆல்டர் ஈகோ என்றால் ஒரு செயலை செய்துவிட்டு தன்னுடைய அடையாளங்களை மறைத்து இன்னொருவராக வாழ்வது என அர்த்தம்.

தந்தையா சஞ்சய் தத்: இதற்கிடையில் திரைப்படத்தில் சஞ்சய் தத் விஜய்க்கு தந்தையாகவும், அர்ஜுன் விஜய்க்கு சகோதரராகவும் நடிக்கின்றனர். இதில் 3 பேருமே கேங்ஸ்டர்தான் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி அன்று படத்தின் முதல் பாடலான நா ரெடி என்ற பாடல் வெளியாகவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத்: இந்த நிலையில் படத்துக்கு இசையமைத்திருக்கும் அனிருத் லியோ பற்றி பேசியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. அதன்படி, லியோ Bloody Sweet படத்தின் காஷ்மீர் சீன்களை பார்த்த அவர், ‘இந்தப் படம் எந்த லெவலுக்கு போகும்னே தெரியாது, அந்த மாதிரி இருக்கும். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு எவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று யோசிக்கலாம். அந்த அளவுக்கு படம் மிகச்சிறப்பாக இருக்கிறது’ என்று படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கூறியதாக சொல்லப்பட்டது.

நட்சத்திர பட்டாளம்: லியோ படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன் மட்டுமில்லாமல் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், மாத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. படத்தின் பாடல் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. படம் அக்டோபர் 19 அன்று வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments