கோடை காலம் தொடங்கும் முன்னரே சுட்டெரிக்கும் வெயிலால் தமிழ்நாடு வாடி வதங்கி வருகிறது. கடந்த 1901-ம் ஆண்டு முதல் இந்த அளவு வெப்பம் பதிவாகவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளது !
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தியாவில் 1901-ம் ஆண்டு முதல் பிப்ரவரி மாதம் அதிக வெப்பம் பதிவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2022-ம் ஆண்டை ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டு கோடை காலம் முன்னதாகவே தொடங்கி, ஜூன் மாதம் தொடக்கம் வரை இந்தியாவில் கடுமையான வெப்ப அலைகள் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கணிக்கப்பட்டது.
மத்திய அரசின் அறிவுறுத்தல்!
இந்நிலையில், மாநில அரசுகள் வெப்பத்தை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அந்த கடிதத்தில், மே மாதம் முழுவதும் வெப்பநிலை இயல்பை காட்டிலும் அதிகமாகும். கடும் வெப்பத்தின் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், “ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். தினசரி, இந்திய வானிலை ஆய்வு மையம், வெப்பநிலை தொடர்பான தகவல்களை பதிவு செய்கிறது. மாநில அரசுகள் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்ப தாக்கத்தால் ஏற்படும் உடல் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்சார தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளல்,.மக்களுக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்” என சுகாதாரத்துறை செயலர் கடிதத்தில் கூறியுள்ளார்.
கொளுத்தும் வெயிலை சமாளிப்பது குறித்து அரசு மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறிய அறிவுரையின் படி, முதியோர்கள், கர்ப்பிணிகள், பெண்கள் உள்ளிட்டோர் இந்த கோடை காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடலில் நீரின் அளவு குறைய வாய்ப்பு உள்ளதால், வெப்பதை சமாளிக்க கூடுதலாக தண்ணீர் அருந்த வேண்டும். முதியவர்கள் வெளியே செல்லும்பொழுது மயக்கம், வாந்தி, சுயநினைவை இழத்தல் போன்றவை நேரக்கூடும். இதனால் அவர்கள் கூடுதலாக கவனமாக இருக்க வேண்டும்
அதே சமயம் வயிற்றுப் கடுப்பு வரவும் வாய்ப்புள்ளது. இந்த வெயிலால் சின்னம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. இதனை போக்க அனைவரும் இளநீர், மோர், வெள்ளரிக்காய் போன்றவற்றை இயன்றவரை உண்ண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்க அரசுடன் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த கொடிய வெப்பநிலையை எதிர்கொள்ள முடியும்.
Read also…