Tuesday, April 16, 2024
HomeDaily UpdateRain Update : தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை வர வாய்ப்பு -...

Rain Update : தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை வர வாய்ப்பு – எங்கு தெரியுமா?

வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கடலூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (வியாழன்) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளி) தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

இதேபோல், 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். இன்றைய வானிலை நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி -40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். மேலும், தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பச் சலனம் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read also…

1901க்குப் பிறகு அதிக வெப்பம் பதிவு ! உடலில் நீரின் அளவு குறையும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments